Ad

Tuesday, October 10, 2017

பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் நமது பதிவை ஆரம்பிப்போம். வடிவேலு சார் நீங்க பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

நான் பார்த்து சிரித்து ரசித்து மகிழ்ந்த வடிவேலுவின் டாப் 10 நகைச்சுவை காட்சிகளை இங்கே பட்டியலிட்டுள்ளேன். இதில் குறிப்பிட்டுள்ள சில படங்களில் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ரசிக்கக்கூடியவை. இது என்னோட விருப்ப பட்டியல். உங்களுக்கு இதில் மாற்று கருத்து இருந்தால் கமெண்ட்டில் தெரிவிக்கவும்

1. கைப்புள்ள காமெடி from வின்னர் (Winner) 2. பிரெண்ட்ஸ் (Friends) 3. Sing In The Rain - மனதை திருடி விட்டாய்(Manathai Thirudi Vittai)4. கைய பிடிச்சி இழுத்தியா from நேசம் புதுசு (Nesam Puthusu)5. வாம்மா மின்னல் from மாயி (Maayi)6.தீப்பொறி திருமுகம் from இங்கிலீஷ்காரன் (Englishkaaran)7.துபாய் பாண்டி from வெற்றிகொடி கட்டு (Vetri Kodi Kattu)8. வடை போச்சே from போக்கிரி (Pokkiri)9. சூனா பானா from கண்ணாத்தாள் (Kannathaal)10. கௌரவம் கௌரவம்னு நாறடிச்சிட்டியே from கார்மேகம் (Kaarmegam)Honerable Mention
இம்சை அரசன் 23-ம் புலிகேசி (Imsai Arasan 23 aam Puli Kesi)


Thursday, January 26, 2012

இளைய தளபதியின் சிறந்த தனி மனித குணங்கள்....


சென்ற பதிவில் தலயின் சிறந்த குணங்களை பார்த்தோம். இந்த பதிவில் எனக்கு தெரிந்த/பிடித்த இளைய தளபதி விஜயின் சிறந்த தனிமனித குணங்களை பார்ப்போம். தல/சூர்யா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த பதிவை படிக்கும் போது விஜயை ஒரு நடிகராக(நடிகர் இல்லைன்னு எங்களுக்கு தெரியும்னு நீங்க சொல்றது கேக்குது) பார்க்காமல் தனிமனிதனாக(??) பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு அஜித் மற்றும் விஜயை பிடிக்கும். விஜயை கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். காரணம் எனக்கிருக்கும் தமிழன் என்ற உணர்வு. தமிழன் எங்கு தாக்கப்பட்டாலும் என் தன்மானம் சும்மா இருக்காது. விஜய் என்ற தமிழன் இணையதளங்களில், SMS-களில் தாக்கப்பட்ட போது தமிழ் உணர்வு என்னை விஜயை அதிகமாக நேசிக்க தூண்டியது.

விடா முயற்சி & உழைப்பு:
விஜய்க்கு அஜித், சூர்யா போல் அழகு கிடையாது. அவர்களை போல் சிறப்பாக நடிக்கவும் தெரியாது. அப்படி இருந்தும் அவர்களை விட முன்னணியில் இருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி தான் காரணம். என்ன தான் அவரின் அப்பா ஆரம்பகாலத்தில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும் இன்று இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் அவரின் விடா முயற்சி, உழைப்பு தான். தொடர்ந்து தோல்வியானாலும் ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்தது விடா முயற்சியின் மற்றொரு உதாரணம்.

இன்வால்வ்மென்ட்/பொறுப்புணர்ச்சி:
தான் நடிக்கும் படத்தில் எந்த அளவுக்கு இன்வால்வ்மென்ட் இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். படத்தின் பாடல்களை/இசையை தானே தேர்ந்தெடுப்பது அவரது இன்வால்வ்மெண்டை பறைசாற்றுகிறது. தயாரிப்பாளரின் கஷ்டம் உணர்ந்து தன்னுடைய பொறுப்பை உணர்த்து வேறு எந்த முயற்சியும்(அதாங்க வேற வேற கெட்அப்) எடுக்காமல் தன்னால் முடித்ததை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

எளிமை:
தான் பெரிய நடிகர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் எப்பொழுதும் எளிமையாகத்தான் இருப்பார். எந்த விழாவிற்கு சென்றாலும் கோட், சூட் இல்லாமல் சாதரணமாக தான் செல்வார். நிறைய பேச மாட்டார். நிறை குடம் நீர் தளும்பாது.

இலக்கு நிர்ணயித்து அதற்காக உழைப்பது:
மற்ற நடிகர் போல நடித்தோம் சம்பாதித்தோம் என்று இல்லாமல் தான் எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்று தெளிவாக இலக்கு நிர்ணயித்து அதற்காக உழைப்பது. (எனக்கும் விஜய் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை. வந்தாலும் ஓட்டு போடமாட்டேன் அரசியல் அனுபவம் பெரும் வரை)

சுயநலத்தில் ஒரு பொதுநலம்:
தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற சுயநலத்திற்காக தன் ரசிகர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தினாலும் அதன் மூலம் ஒரு சிலருக்கு உதவி செய்வது பொது நலமே. சுயநலத்திலும் ஒரு பொது நலம்.

அப்பா பிள்ளை:
இவ்வளவு பெரிய நடிகர் ஆனபிறகும் கூட தன்னுடைய அப்பா பேச்சை மறுக்காமல் அதன்படி நடப்பது என்பது மிகவும் அரிதான விஷயம் தான்(சொந்தமாக யோசிக்க தெரியாதுன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்குறது தெரியுது). 'எங்கள் வீட்டு பிள்ளை' இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தந்தையும் நினைக்கிறார்கள்.

டிரென்ட் செட்டர்:
எந்த ஒரு விசயமானாலும் தன்னை அடுத்தவர் ஃபலோவ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து தான் செய்கிறார். விஜய் எப்படி டிரென்ட் செட் பண்ணினார் என்று இங்கே படிக்கவும்.


Tuesday, January 24, 2012

நான் ரசித்த அஜித்தின் சிறந்த குணங்கள்

அஜித் ரசிகனாக இல்லாத போதும் அஜித்தின் ஒரு சில குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த குணங்கள் மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்.

அழகான பெர்சனாலிட்டி:
வாழ்கையில் முன்னேற ஒருவருக்கு தேவைப்படுவது முதல் வாய்ப்பு. அப்படிப்பட்ட வாய்ப்பு சிபரிசிலோ(recommendation) அல்லது நாம் படித்த படிப்பினாலோ கிடைக்கலாம். ஆனால் தன்னுடைய வசீகர தோற்றத்தின் மூலமாக முதல் வாய்ப்பு கிடைக்க பெற்றவர் அஜித். இன்றைக்குள்ள தமிழ் நடிகர்களில் அஜித் மட்டுமே அழகான பெர்சனாலிட்டி...

தைரியம்:
தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அது யாராக இருந்தாலும் பட்டென்று வெளிப்படையாக கூறிவிடுவார்.
உதா: கலைஞர் முன்னிலையில் விழாவிற்கு வற்புறுத்தி அழைத்தது பற்றி பேசியது, ரசிகர் மன்றங்களை கலைத்தது, தமிழ் படத்தையே ரீமேக் செய்தது.

மனிதாபிமானம் மிக்கவர்:
அஜித் உண்மையிலேயே மனிதாபிமானம் மிக்கவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சரி சமமாக நடத்துமாறு கேட்டுள்ளார்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர்:
மங்காத்தா படம் வெளிவருதில் இருந்த சிக்கலை போக்க இன்றைய முதல்வரை சந்திக்குமாறு கூறினார்கள். ஆனால் நடிக்க வேண்டியது மட்டும் தான் என்வேலை படம் வெளியிடுவது தயாரிப்பாளர் வேலை என்று உள்ளதை உள்ளபடி கூறினார்.

ஆசை அதிகம் இல்லாதவர்:
தனக்கு மாஸ் இருந்தாலும் மற்ற நடிகர்களை போல அதிக சம்பளம் மற்றும் ஏரியா ரைட்ஸ் எதுவும் கேட்காதவர். ஆசை அதிகம் இல்லாதவர் என்பதற்கு மற்றும் ஒரு காரணம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தால் அவர் மோட்டார் ரேஸில் கலந்து கொண்டிருக்க மாட்டார்.


தளபதி ரசிகர்களே கவலை வேண்டாம் அடுத்த பதிவு தளபதியை பற்றி தான். அதுவரையில் நீங்கள் எது சிறந்த குணம் என்று கருதுகிறீர்களோ அதை கமெண்ட்ஸில் தெரியப்படுத்தவும்...

Sunday, January 22, 2012

மேதை வெற்றியை தொடர்ந்து மாமேதை ஆங்கிலத்தில் : ஜேம்ஸ் கேமரூன்


மேதையின் மாபெரும்(!!) வெற்றியை தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயராக காத்துகொண்டிருக்கும் அடுத்த படத்திற்காக தன்னை தயார் பண்ணிக்கொண்டிருந்த டவுசர் என்று செல்லமாக அழைக்கப்படும் மக்கள் நாயகன் ராமராஜன் லொள்ளு நேயர்களுக்கான பேட்டி என்றதும் முக மலர்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.

இதோ மக்கள் நாயகனின் பேட்டி உங்களுக்காக.
நாம்: என்ன சார் ரொம்ப தீவிரமா ஏதோ பண்றீங்க போல
ம.நா: என்ன பண்றேனா? மேலே இருக்குற போட்டோவ பாத்தா தெரியலையா?

நாம்: ஒரு மறத்தமிழனான நீங்க தீவிரமா இங்கிலீஷ் பேப்பர் படிக்கிறீங்களே எதுக்கு சார்?
ம.நா: நம்ம கேமராமேன் சாரி ஜேம்ஸ் கேமரூன் ஹாலிவுட்ல அவதார்-2 படம் பண்ற கேப்ல நம்மள வச்சு ஒரு படம் பண்ணனும்னு ரொம்ப கெஞ்சி கேட்டார்.. அதுக்காக தான் என்னை தயார் பண்ணிட்டுருக்கேன்.

நாம்: அவருக்கு எப்படி உங்களபத்தி தெரிஞ்சது?
ம.நா: மேதை படம் ரிலீஸ் ஆனதும் இன்டர்நெட்ல அதிகம் அடிபட்ட படம் மேதை. அதுவுமில்லாம அதிகம் தேடப்பட்ட நடிகர்களில் எனக்கு தான் முதலிடம். ரஜினி, விஜய், அஜித்து டாப் 10-ல கூட வரமுடியல. நம்ம டிகார்பியோவுக்கு ரெண்டாவது இடம் தான். முதலிடம் கிடைச்சதால கேமரூனுக்கு என்ன வச்சு படம் எடுக்க ஆசை வந்து என்னை புக் பண்ணிட்டார்..

நாம்: அப்ப நம்ம பவர் ஸ்டார், சாம் அன்டேர்சன்?
ம.நா: அவங்களுக்கெல்லாம் ஏழாவது மற்றும் பத்தாவது இடம் தான்

நாம்: இந்த படத்துல என்ன மாதிரி ரோல் பண்றீங்க?
ம.நா: 'cow'பாய் ரோல் பண்றேன்

நாம்: படத்துக்கு பேரு வச்சாச்ச சார்
ம.நா: மாமேதை
நாம்: இந்த பேரை நீங்க தான் செலக்ட் பண்ணிங்களா?
ம.நா: நான் சொன்ன பேரு 'அம்மா'மேதை. கௌபாய் சம்பந்தபட்ட படமானதால் 'ம்ம்ம்மா'மேதை-னு வச்சுக்கலாம்னு கேமரூன் சொன்னாரு.. நாம தான் தீவிர அம்மாவின் தொண்டனாச்சே அதுவுமில்லாம பசு நேசன் என்பதாலும் கடைசில 'மா'மேதை-னு வச்சாச்சு

நாம்: மாமேதை மேதை படத்தின் இரண்டாம் பாகமா?
ம.நா: இல்லை இல்லை இது டோட்டலா வேற கதை

நாம்: படத்துல எதாவது பஞ்ச் டயலாக் உண்டா சார்?
ம.நா: ஆமா உண்டு "தர்மம் தலை காக்கும்... பட், டவுசர் தான் மானம் காக்கும்..."
நாம்: சூப்பர் சார் சூப்பர். கரகாட்டகாரனுக்கு அப்புறம் மேதைக்கு ஏன் இவளோ இடைவெளி?
ம.நா: கெரகம் நல்லா இருந்ததுனால கரகம் நல்லா ஓடுச்சு.. அதுக்கு அப்புறம் கெரகம் சரி இல்லை அதான் இந்த கேப்.

நாம்: ஒரு தமிழனான நீங்க ஹாலிவுட்ல எப்படி நடிக்க ஒத்துகிட்டிங்க
ம.நா: தமிழனுக்கு பாடம் சொல்லி தரனும் என்பதற்காக தான்

நாம்: பாடம் சொல்லி தர அளவுக்கு தமிழன் என்ன பண்ணினான்?
ம.நா: தமிழ் படத்துல இங்கிலீஷ் படத்துக்கு சமமா ஒரு சீன் வந்த ரசிக்குறதுக்கு பதிலா கிண்டல் பண்றாங்க. லாஜிக் இல்லாம இங்கிலீஷ்காரன் படம் எடுத்தா கைதட்டி ரசிக்குறாங்க.. அவங்களுக்கு எல்லாம் ஒரு நல்லா பாடம் சொல்லி தரனும் அதான்..
நாம்: விஜயகாந்த் நடிச்ச நரசிம்மா, வேலாயுதம் டிரெயின் சீன், 7-ம் அறிவு கிளைமாக்ஸ் இத பத்தி தமிழன் அடிக்குற கமெண்ட்ஸ் பத்தி சொல்றிங்களா
ம.நா: ஆமாம். மாமேதை இந்த மாதிரி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சாட்டை அடியாக இருக்கும்.

நாம்: சார் நமது வாசகர்களுக்காக மாமேதை படத்தின் போட்டோ தரமுடியுமா.
ம.நா: நீங்க மேதை படத்தின் வெற்றி விழாவிற்கு வாருங்கள் தருகிறேன்.

தமிழ்நாட்டு மக்களே நீங்கள் சீக்கிரம் திருந்திகொள்ளுங்கள் இல்லை என்றால் மாமேதை உங்களை திருத்த வருகிறார்.

Thursday, January 19, 2012

அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் - பாலியல் உறவு பற்றியது : இந்தியாவில்நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்தியர்களாகிய நாம் செக்ஸ் பற்றி தான் நிறைய நேரம் யோசிக்கின்றோம். 
சமீபத்தில் இந்திய டுடே மற்றும் அவுட்லுக் பத்திரிகைகள் சமீபத்தில் பாலியல் உறவு பற்றி ஒரு சர்வே எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் அதிர்ச்சி தரக்கூடியாத உள்ளது.
அவுட்லுக் 2011-ல் 30 மற்றும் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொண்டது. அதே சமயம் இந்திய டுடே 18 மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொண்டது.

அவுட்லுக்கின் சர்வே முடிவில் 45 வயதுக்குட்பட்டவர்களில் 94 சதவிகிதம் பேர் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை மிகவும் திருப்தியாக உள்ளதாக கூறியுள்ளது.

அதற்கு மாறாக இந்திய டுடே 33 சதவிகித மனைவிகள் திருமணமாகிய சில வருடங்களிலே போர் அடிப்பதாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

அவுட்லுக் சர்வே: 40.3 சதவிகித இந்தியர்கள் தங்களுடைய தற்போதைய செக்ஸ் வாழ்க்கை மிகவும் திருப்தியாகவும் 53.6 சதவிகிதம் பேர் திருப்தியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய டுடே சர்வே: மாறாக 48 சதவிகித கணவன்மார்கள் தாங்கள் திருப்தியாக உடலுறவு கொண்டது தனது மனைவியிடம் இல்லை என்றும், 49 சதவிகித மனைவிமார்கள் பொய்யான தலைவலி போன்ற காரணத்தை கூறி உடலுறவை விரும்புவதில்லையாம்.

இந்திய டுடே சர்வே: 66 சதவிகித கணவன்மார்கள் நீலப்படங்களை பார்ப்பதாகவும், அதில் 23 சதவிகிதம் பேர் கள்ளதொடர்பு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

மேலும் 28 சதவிகித கணவன்மார்கள் ஒரு இரவு மட்டும் கள்ளதொடர்புக்கு தயாராக உள்ளதாகவும், 16 சதவிகிதம் பேர் மனைவியை பரிமாறிக்கொள்ளவும் (swaping) தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவுட்லுக் சர்வே: 33.4 சதவிகித ஜோடிகள் மாதத்திற்கு 11-லிருந்து 20 முறை உடலுவு வைத்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். 32.1 சதவிகித ஜோடிகள் வாரமிருமுறையும் (சண்டேனா ரெண்டா??), 31.3 சதவிகித ஜோடிகள் வரம் ஒருமுறையும் உகந்ததாக தெரிவித்துள்ளனர்.

நடுத்தர வயதில் உள்ளவர்கள் தங்களின் இளமை காலத்தை விட இப்பொழுது நன்றாக என்ஜாய் பன்னுவதாகவும், 46 சதவிகிதம் பேர் அதே மாதிரி இருப்பதாகவும், 44 சதவிகிதம் பேர் முன்னை விட இப்பொழுது சுவாரசியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் 70.8 சதவிகித ஜோடிகள் புதிது புதிதாக பரிசோதித்துக்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டு சர்வேயிலும் சிறிய நகரத்தில் உள்ளவர்கள் உடலுறவில் திருப்தி அடைந்ததாக கூறியுள்ளது.

அவுட்லுக் சர்வே: 23 சதவிகிதம் பேர் தங்களை விட வயது குறைந்தவர்களிடம் உடலுறவு கொள்வதாக கற்பனை செய்துள்ளதாகவும், 12.4 சதவிகிதம் பேர் பிரபலங்களிடம் உடலுறவு கொள்வதாக கற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் (வித்யா பாலன், சல்மான் கான் முன்னிலையில் உள்ளார்களாம்)

இந்திய டுடே சர்வே: சினிமா துறையில் உள்ளவர்கள் தான் மிகவும் கற்பனையில் வருபவர்களாம். 48 சதவிகித ஆண்கள் நடிகைகளை கற்பனை செய்வார்களாம்.

மேலும் 35.1 சதவிகிதம் பேர் ஆன்லைன் ஊடகங்களின் மூலம் அறிமுகமான நபரை சந்தித்துள்ளதாகவும் இதில் 58.3 சதவிகித சந்திப்பு படுக்கையறையில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகாத கன்னி பெண்களில் 77 சதவிகிதம் பேர் கருத்தடை மாத்திரை உபயோகித்ததாகவும், திருமணமான பெண்களில் 26 சதவிகிதம் பேர் கருத்தடை மாத்திரை உபயோகித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

14 சதவிகித பெண்கள் கருகலைப்பு செய்துள்ளதாகவும் இதில் 39 சதவிகித பெண்கள் திருமணம் ஆகாதவர்கள்.

10 சதவிகித ஆண்களும் 5 சதவிகித பெண்களும் தங்களின் நெருக்கமான (கணவனோ, மனைவியோ அல்லாத) சொந்தங்களிடம் தகாத உறவு வைத்துள்ளர்கள்.

இதில் 26 சதவிகிதம் பேர் மாமா, சித்தப்பா, அத்தை, சித்தி, பெற்றோர், மாமனார், மாமியார் மற்றும் சகோதர, சகோதரிகளிடம் உடலுறவு வைத்துள்ளர்கள்.

இந்திய டுடே சர்வே: 26 சதவிகிதம் பேர் திருமணத்திற்கு முன்பே செக்ஸ்ஸில் அனுபவம் பெற வேண்டும் என்றும் 17 சதவிகிதம் பேர் கன்னித்தன்மையை பற்றி கவலை படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

37 சதவிகித ஆண்களும், 12 சதவிகித பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உடலுறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.திருமணம் நிச்சயிகப்பட்ட ஜோடிகளில் 25 சதவிகித ஜோடி திருமனத்திற்கு முன்னரே(இரு குடும்பத்திற்கும் தெரியாமல்) உடலுறவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்திய டுடே சர்வே: 37 சதவிகித ஆண்களும், 34 சதவிகித பெண்களும் செக்ஸ் சம்பந்தப்பட்ட போட்டோ/வீடியோ பார்ப்பதாகவும், இதில் 49 சதவிகித பெண்கள் தங்கள் துணையுடன் மட்டும் தான் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் 44 சதவிகித டெல்லிவாலாக்கள் டீன்ஏஜ் பருவத்திலேயே முதல் முறையாக உடலுறவு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காமசூத்ரா கலையை கண்டுபிச்ச நம்ம நாட்டுல இதெல்லாம்  சகஜமப்பா-னு நீங்க நினைக்குறது எனக்கு கேக்குது ..
நன்றி rediff.com

Wednesday, January 18, 2012

விஜய் வழியில் நான்: ரஜினி

ரஜினியின் சமீபத்திய செயல்பாடுகளை விஜயை பின்பற்றியே செய்கிறார்.

இளைய தளபதி விஜய்க்கு தமிழ்நாடு அரசியலை விட தேசிய அரிசியலில் தான் மிகவும் ஆர்வம்.

இதற்கு உதாரணமாக முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் பங்கேற்காதது மட்டுமின்றி, அன்னா ஹசாரே-வுக்கு ஆதரவு, ராகுல் காந்தி சந்திப்பு என அனைத்தையும் சொல்லலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியும் இளையதளபதியின் வழியில் தேசிய அரிசியலில் ஆர்வம் காட்டுகிறார். ரஜினியும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அன்னா ஹசாரே-வுக்கு மண்டபம் மற்றும் ஆதரவு வழங்கியது. மேலும் தேசிய நதிகளை இணைப்பதற்கு கோடிகளை அள்ளி கொட்டவும் தயாராக உள்ளார். ரஜினியின் செல்வாக்கு அணைத்து மாநிலங்களிலும் எந்திரன் படத்திற்கு அப்புறம் உயர்ந்துள்ளது.

மிக விரைவில் விஜயின் வழியில் தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளது என்று அறிவிப்பு ரஜினியிடமிருந்து வரலாம்.

Monday, January 16, 2012

சி.பி.செந்தில்/தமிழ் ஆதி என்ன வேலை, வெட்டி இல்லாதவரா?


கொஞ்ச நாளாகவே, இல்லை.. இல்லை.. ரொம்ப நாளாகவே பதிவுலகில் ஒரு டிரென்ட் வந்திருக்கு.
அது என்னவென்றால் தன்னிலை விளக்கம் தருவது.

ஒன்னுமில்லங்க மேட்டர் சிம்பிள் தான். அதாவது நாம ஸ்கூல்/காலேஜ்/ஆபீசுக்கு ஒரு ரெண்டு, மூணு நாள் போகலேன்னா உடனே நாம அடுத்த தடவை போகும் போது கேக்குற எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்.

அனால் இந்த பதிவுலகில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு எந்த பதிவுமே போடாம அதுக்கு விளக்கம் தருவாங்களே பாருங்க.
"வேலை பளுவின் காரணமாக", "டைம் கிடைக்கலை", "டெட் லையனுக்குள்ள(செத்த சிங்கம் இல்ல deadline) ப்ராஜெக்ட் முடிக்கணும்".
இப்படி பல தரப்பட்ட காரணம் சொல்லுவாங்க.

ஏதோ இவங்க தான் ஆபீஸ தாங்கி நிறுத்துற மாதிரி. அப்ப தினமும் இரண்டு அல்லது மூன்று பதிவு போடுற சி.பி.செந்திலுக்கு வேற வேலையே கிடையாதா?
பதிவு போடுறது மட்டும் தானா அவருக்கு முழுநேர வேலை? கண்டிப்பாக இல்லை. எவ்வளவு வேலை இருந்தாலும் அவருடைய ரசிக கண்மணிகளுக்காக தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஒதுக்குகிறார்.

அப்பாடக்கர் பதிவர்களே.. உங்களை பதிவு போடுங்கள் என்று யாரும் கேட்கவில்லை. நீங்கள் ஒரு வாரம் அல்லது ஒரு மாதமாக ஏன் பதிவு போடவில்லை என்று யாரும் கேட்க போவதுமில்லை. அப்படி இருக்கும் போது நீங்களாக எதற்கு "As I am suffering from project deadline/work load kindly grant me one week leave"-னு தன்னிலை விளக்கம் தருகிறீர்கள்.

உங்களால் முடிந்தால் நம்ம "தமிழ் ஆதி" மாதிரி வெட்டி பதிவாவது போடுங்கள் உங்கள் ரசிக கண்மணிகளுக்காக.

சி.பி அண்ணன் மற்றும் ஆதி அண்ணன் அவர்களே.. உங்களிடம் கேட்காமல் உங்களை பற்றி இந்த பதிவில் கூறியதற்கு என்னை மன்னிக்கவும். நீங்கள் தான் எங்களை போன்ற பதிவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடியவர்கள். தவறாமல் தினமும் இரண்டு மூன்று பதிவு போடும் உங்கள் கடமை எனக்கு பிடித்திருகிறது.


டிஸ்கி: பச்சை பச்சையாக திட்டி விட்டு பச்சை கலரில் மன்னிப்பு கேட்டால் போதுமா?